நேபாள எல்லைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by wp_fhdn

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் செவ்வாய்க்கிழமை (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அந் நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

இதன் அதிர்வு பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் உண்டான செத்து மற்றும் உயிர் சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

நேபாளம் புவியியல் ரீதியாக சுறுசுறுப்பான பகுதியில் அமைந்துள்ளது.

அங்கு இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் மோதிக் கொள்வதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு முகங்கெடுக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்