திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!

by guasw2

சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை 7.1 மெக்னிடியூட் அளவில் தாக்கிய இந்த நிலநடுக்கமானது அண்டை நாடான நேபாளம், பூடான் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் இமயமலை முழுவதும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க‍ புவியியல் ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 3,400 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் 340 க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்