5
சர்ச்சைக்குரிய மருந்துகளால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார்.