6
குழுவின் அறிக்கையின் பின்னர் அர்ச்சுனா குறித்து தீர்மானம் – சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ண ! on Tuesday, January 07, 2025
யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனறு நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்கின்றது அதன்அறிக்கையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.