காத்தான்குடியில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் கைது !

by 9vbzz1

on Tuesday, January 07, 2025

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 10 நபர்கள், கசிப்பு போதை பொருள் விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 60 நபர்கள், வேகமாக வாகனம் ஓட்டியமை உட்பட வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 27 பேருமாக 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்