கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது ! on Tuesday, January 07, 2025
(பாறுக் ஷிஹான்)
கேரளா கஞ்சாவுடன் வீதியில் பயணம் செய்த 34 வயது சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதவன் வீதி பகுதியில் திங்கட்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை 03 சின்னத்தம்பி வீதியை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டவராவார்.
மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.