கல்முனையில் ஒரேநேரத்தில் ஐந்து வாகனங்கள் விபத்து !

by smngrx01

கல்முனையில் ஒரேநேரத்தில் ஐந்து வாகனங்கள் விபத்து ! on Tuesday, January 07, 2025

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒரே திசையில் பயணித்த ஐந்து வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வாகன விபத்து, நேற்று (6) இடம்பெற்றுள்ளது.

அதன்படி, ஒரே நேரத்தில் ஒரு முச்சக்கர வண்டி, ஒரு பஸ் மற்றும் மூன்று கார்கள் என்பன இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதனால் அப் பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்தும் தடைபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில், வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிராபத்து எதுவும் இடம்பெறவில்லையெனவும் கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்