கஜேந்திரகுமார்-சிறீதரன்-செல்வம் : பேச்சு!

by smngrx01

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் 15ம் திகதி சி.சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தலைவர்களுடான சந்திக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று அறிவித்துள்ளார்.

இதனிடையே வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன்; தெரிவித்துள்ளார்.

புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான  முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கக் கூடிய புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.

புதிய அரசாங்கம் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தில் மாற்றம். அரசியலில் மாற்றம். ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது. என பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கிறது. அந்த அடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தொவு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு மாற்றம் ஏற்படும் என்பதற்காக தான் அந்த வாக்குகளும் அளிக்கப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் சரியான அறவிப்புக்களை வெளியிடுமாக இருந்தால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலத்தை உருவாக்கி முழுமையான சுயாட்சியை உருவாக்குவதற்கான கருத்துக்கள அல்லது அறிக்கைகளை எல்லோருடனும் இணைநது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் கொடுப்போம். முதலாவது இந்த அரசாங்கம் குழுவை நியமிக்க வேண்டும். அதனை இரண்டு வருடத்திலா அல்லது மூன்று வருடத்திலா அல்லது உடனடியாக நியமிப்பார்களா என்பது எங்களுக்கு தெரியாது.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பட்சத்தில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டும். அவ்வாறு விடப்பட்டால் தான் அது நிறைவு பெறும். மக்கள் மத்தியில் சென்று அதற்கான ஆதரவை திரட்ட வேண்டுமாக இருந்தால் இந்த அரசங்கம் விரைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். அப்போது தான் சாத்தியமாகலாம். காலம் செல்ல ஆட்சியின் மீதும், ஆட்சி அதிகாரம் மீதும் பல்வேறு குறைபாடுகள் வரும். அதற்கு முன்பாக அரசியல் சாசனம் வர வேண்டும் என விருப்புகின்றோம் எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்