7
on Tuesday, January 07, 2025
By Shana
No comments
அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் அதன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அறிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்கள பிரதானிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டு நிதியமைச்சின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.
இவ்வாறு ஏலம் விடப்படும் வாகனங்களை எந்தவொரு அரச நிறுவனமும் கொள்வனவு செய்யக்கூடாது எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
You may like these posts