இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!

by guasw2

2016ஆம் ஆண்டிற்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் “அருகாமையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் தெரிவித்துள்ளார்

அதன்படி இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத் திட்டங்களின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் பணிகளை நாங்கள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகிறோம். பல பாடசாலைகளில், அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனவே, இந்த நேரத்தில் அனைத்து பாடசாலைகளையும் மதிப்பாய்வு செய்து, எங்கள் திட்டத்தின்படி அனைத்துமாணவர்களும் மூன்று கிலோமீட்டருக்குள் செல்லக்கூடிய தொடக்கப் பாடசாலையையும், இதுபோன்ற பல பாடசாலைகளை சேர்க்கக்கூடிய முழு வசதிகளுடன் கூடிய மேல்நிலைப் பாடசாலையையும் நாங்கள் திட்டமிடுகின்றோம்.

இதனை மீண்டும் ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டும் என நாங்கள் நம்பவில்லை என தெரிவித்த பிரதமர், தற்போது பாதியில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் அந்த பாடசாலைகளை தேர்வு செய்து பணிகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்