7
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தலைவிதி குழு விசாரணையின் முடிவுகளை சார்ந்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று அறிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு உரிமை பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அர்ச்சுனாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சபாநாயகர் கூறினார்.
“எதிர்க்கட்சி சபாநாயகரின் ஆலோசனையின் முடிவுக்கு காத்திருக்கின்றது,” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக் தெரிவித்தார்.
மேலும் அண்மையில் தவறான நடத்தையால் குற்றம் சாட்டப்பட்ட குறித்த எம்.பி., தற்போது விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார்.