பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மீதான வழக்கு விசாரணை திங்கட்கிழமை தொடங்க இருந்தது. 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக மறைந்த லிபிய தலைவர் மொம்மர் கடாபியின் அரசாங்கத்திடம் இருந்து நிதி பெற்றதாக முன்னாள் தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சார்க்கோசிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஊழல், சட்டவிரோத பிரச்சார நிதியுதவி, குற்றவியல் கூட்டு மற்றும் பொது நிதி மோசடி ஆகியவை அடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
69 வயதான சார்க்கோசி, கடாபியின் அனுமதி பெற்ற அரசாங்கத்திலிருந்து சில நிதிகள் வந்ததாகக் கூறப்படும் ஆவணத்தை போலி என்று முத்திரை குத்தியுள்ளார்.
அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
சார்க்கோசியுடன், மூன்று முன்னாள் அமைச்சர்கள் உட்பட பதினொரு பிரதிவாதிகள் விசாரணையில் உள்ளனர்.
பிராங்கோ-லெபனான் தொழிலதிபர் ஜியாத் டாக்கிடின், பரிவர்த்தனையின் தரகர் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அவர் லெபனானுக்கு தப்பிச் சென்றுவிட்டார் மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாகமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
“லிபிய வழக்கு” என்று அழைக்கப்படுபவை முன்னாள் ஜனாதிபதியை உள்ளடக்கிய பல ஊழல்களில் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிர்ச்சியூட்டும் வழக்கு, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
கடாபியின் அரசாங்கம் சார்க்கோசியின் 2007 பிரச்சாரத்திற்கு நிதியளித்தத 2011ஆம் ஆண்டு லிபிய செய்தி நிறுவனம் ஒன்று கூறியபோது இந்த வழக்கு வெளிப்பட்டது.
நிக்கோலஸ் சர்கோசி பதவிக்கு வந்ததற்கு நன்றி என ஒரு நேர்காணலில் கடாபியே குறிப்பிட்டார். அவர் வெற்றிபெற அனுமதித்த நிதியை நாங்கள் அவருக்கு வழங்கினோம் என்று கூறினார். எவ்வளவு தொகை என்பதையும் பிற விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை.
2007 இல் கடாபியை பாரிஸுக்கு பெரும் மரியாதையுடன் வரவேற்ற சார்க்கோசி. மார்ச் 2011 இல் லிபியாவில் இராணுவத் தலையீட்டிற்கு அழுத்தம் கொடுத்த முதல் மேற்கத்திய தலைவர்களில் சார்க்கோசியும் ஒருவரானார்.
கடாபி அதே ஆண்டு அக்டோபரில் எதிர்க்கட்சி போராளிகளால் கொல்லப்பட்டார், வட ஆபிரிக்க நாட்டின் நான்கு தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்தது.