அலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது 20 ) என்ற இளைஞனே விரக்தி அடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மரணமடைந்துள்ளார்.
குறித்த மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் மரணம் அடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
மரணமடைந்த இளைஞரின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்