by sakana1

எந்தவொரு அதிகார அரசியல் நகர்விலும் பங்காளியாகச் செயற்படேன் நாட்டு மக்களின் நலனை இலக்காகக்கொண்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு அப்பால், தாம் எந்தவொரு அதிகார அரசியல் செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்கப்போவதில்லை என அவ்வியக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய தேசியக்கட்சியையும் ஒன்றிணைப்பதற்கான மத்தியஸ்த்தத்தை வகிக்குமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரவிருப்பதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, ‘நான் எந்தவொரு அரசியல் தரப்பினதும் பங்காளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ செயற்படமாட்டேன்’ என சுட்டிக்காட்டியுள்ள கரு ஜயசூரிய, ‘நாட்டின்மீது அதீத மரியாதையும், பற்றும் கொண்ட பிரஜை என்ற ரீதியில் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி எனது இனிவருங்கால வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்துச் செயலாற்றுவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்