இன்று கையெழுத்து வேட்டை சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
விசாரணை எனும் பெயரில் நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கம் பல்வேறு இடங்களிலும் கையெழுத்துப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
இதன் தொடராக இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கமைய யாழ். ஆயர் இல்லத்துக்கு அருகாமையில் இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இந்தக் கையெழுத்துப் போராட்டம் நாளையும் நாளைமறுதினமும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறையில் வாடும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படுகின்ற இந்தப் போராட்டத்தில் அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரையும் கலந்துகொள்ளுமாறு போராளிகள் நலன்புரிச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது