சிறிலங்கா
இன்று மழையுடனான வானிலை Posted on January 6, 2025 at 06:33 by நிலையவள்
9 0
நாட்டின் சில பகுதிகளில் இன்று (06) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும்.
அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
Previous Post