by guasw2

காதலியை கரம்பிடித்த மேக்னஸ் கார்ல்சன் நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் [34 வயது] தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார். நேற்று [சனிக்கிழமை] நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Holmenkollen Chapel தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகமான NRK இன் செய்திகள் தெரிவிக்கின்றன. chess.com இன் படி, திருமணத்தில் நார்வே நாட்டு செஸ் வீரர்கள் ஜோஹன்னஸ் க்விஸ்லா மற்றும் அஸ்கில்ட் பிரைன், ஜிஎம் பீட்டர் ஹெய்ன் நீல்சன் மற்றும் ஜிஎம் ஜான் லுட்விக் ஹேமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் திருமணத்தின் போது நெட்பிளிக்ஸ் படக்குழுவினரும் உடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் – மலோன் திருமண வரவேற்பு நடந்தது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் சேலஞ்சர் நிகழ்வின் போது இவர்கள் காதலை வெளிப்படுத்தினர்.

அதன்பின் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் ஜோடியாக காணப்பட்டனர். கார்ல்சனின் செஸ் போட்டிகளின் போது அவருக்கு மலோன் ஆதரவளிப்பதைக் காணலாம்.26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார். ஊடக அறிக்கைகளின்படி, அவர் ஒஸ்லோவில் வளர்ந்தார்,

அமெரிக்காவில் படித்தார், மேலும் சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார், அங்கு அவர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.மலோனுடனான திருமணம் கார்ல்சனின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் கார்ல்சன், ஐந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்கள் உட்பட ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்