5
விண்ணில் இருந்து விழுந்த வளையம் – கென்யாவில் கிராம மக்கள் அதிர்ச்சி
விண்ணில் இருந்து விழுந்த வளையம் – கென்யாவில் கிராம மக்கள் அதிர்ச்சி
விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் உதிரி பாகங்கள், விண்வெளியிலேயே எரிந்து சாம்பலாகும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.
ஆனால் சமீபத்தில், கென்யாவில் உள்ள கிராமம் ஒன்றில் வளைய வடிவில் அரை டன் எடை கொண்ட உலோகம் ஒன்று விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், இந்த வளையம் எந்த ராக்கெட்டில் இருந்து வந்து விழுந்தது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது கென்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம்.
இந்த அசம்பாவிதம், விண்வெளியில் சுற்றிவரும் பொருட்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரம் இந்த வீடியோவில்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.