முட்டை மற்றும் கோழி இறைச்சி மீதான வற் வரியை நீக்கினால் அவற்றின் விற்பனை விலையை குறைக்க முடியு

by smngrx01

முட்டை மற்றும் கோழி இறைச்சி மீதான வற் வரியை நீக்கினால் அவற்றின் விற்பனை விலையை குறைக்க முடியும் ! on Monday, January 06, 2025

முட்டை மற்றும் கோழி இறைச்சி மீதான வற் வரியை நீக்கினால் அவற்றின் விற்பனை விலையை குறைக்க முடியும். மூலப் பொருட்களின் விலைகளை குறைக்காமல் விலை குறைப்புக்கான கோரிக்கை முன்வைப்பது நியாயமற்றது என அகில இலங்கை பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
முட்டையின் விலை குறைவடைந்துள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி மீதான வற் வரியை நீக்குமாறு நிதியமைச்சிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இருப்பினும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கவில்லை.

ஒரு முட்டை உற்பத்தியின் போது 6 ரூபாவும், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தியின் போது 215 ரூபாவும் வெற் வரியாக அறவிடப்படுகிறது. ஆகவே வெற் வரியை குறைத்தால் கோழி இறைச்சியின் விற்பனை விலையை குறைக்க முடியும்.

விலங்கு தீவனத்தின் மீதான வெற் வரியை நீக்க வேண்டும் என்று நிதியமைச்சிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். மூலப்பொருட்களின் விலைகளை குறைக்காமல் உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்குமாறு குறிப்பிடுவது நியாயமற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் உணவு பொருட்கள் மீதான வெற் வரியை நீக்குவதாக குறிப்பிட்டார்.

ஆகவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறோம். வெற் வரியினால் எமது தொழிற்றுறை பாதிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியின் விலையேற்றத்தால் விற்பனை வீதம் குறைவடைந்துள்ளது. ஆகவே விலையை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உறுதியாக உள்ளோம். ஆகவே விலைக்குறைப்புக்கான சாதகமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்