நாட்டில் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகரிப்பு!

by guasw2

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிற்செய்கை காலங்களில் எலிக்காய்ச்சல் தொற்று கடந்த காலங்களில்  பதிவாகியிருக்கிறது.

எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: athavannewsnewssrilankaupdate

தொடர்புடைய செய்திகள்