தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் சந்தர்ப்பம்.

by guasw2

பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. திங்கட் கிழமை நள்ளிரவின் பின்னர் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய எந்த வகையான பிரச்சாரங்களையும் முன்னெடுக்க இயலாது. இந்த ஒழுங்கு முறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வியமைச்சுத் தீர்மானித்துள்ளது. தேர்தலின் பின்னர் எதிர்வரும் 18ஆம்திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும்.

வாக்களிப்பு நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தலில் வாக்களிப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், உரிய முறையில் விடுமுறை வழங்கப்படாமை பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்