“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தால் பெரும் அவதி; பஸ் சாரதிகள்!

by wp_fhdn

“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்துடன் இணைந்து பொலிஸாரால் அமுல்படுத்தப்படும் பயணிகள் பஸ்கள் சோதனையின் மூலம் தமது பணிகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பஸ் சாரதிகள் செவ்வாய் (07) முதல் பஸ் ச‍ேவையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.

இதற்கு தீர்வு கிடைக்காவிடின் அதனை மேலும் தொடருவதற்கும் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக பஸ் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை அதிகாரிகள் பஸ்களை நிறுத்தி சாரதிகள், நடத்துனர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி போக்குவரத்து சேவையை அலக்களிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை எதிர்பார்த்து தாம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கவில்லை.

நாட்டில் செய்ய வேண்டிய விடயங்கள் இன்னும் அதிகமாக உள்ளன.

எனவே, “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை உரிய முறையில் அங்கீகரித்து அதனை முறையாக நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் பொலிஸாரிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாரோ அல்லது வேறு எவரும் அதற்கு மேலதிகமாக செயற்பட முடியாது எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்