ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது – அம்பாறையில் சம்பவம் ! on Monday, January 06, 2025
ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(5) மாலை இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மற்றும் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வாங்காமம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்று பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.