இரவு நேரத்தில் சிகிரியா கோட்டையை பார்வையிட அனுமதி !

by wp_shnn

இரவு நேரத்தில் சிகிரியா கோட்டையை பார்வையிட அனுமதி ! on Monday, January 06, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா கோட்டையை நிலவு இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது.

பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்களுக்கு ‘சிகிரியா நிலவில்’ என்ற வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் பௌர்ணமி தினத்திற்கு பின்னரான இரண்டு நாட்களிலும் பெளர்ணமி தினத்தன்றும் சுற்றுலா பயணிகள் சிகிரியாவை பார்வையிடலாம்.

சுற்றுலாத்துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்