அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு ! on Monday, January 06, 2025
அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் நிர்வாகச் சிக்கல்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்கள், மாணவர்களின் குடியிருப்புப் பிரச்சனைகள், உதவித்தொகை செலுத்தும் செயல்முறையை முறைப்படுத்துதல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து இதன்போது பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிரதி கல்வி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.