இலங்கையின் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர்.ரணவக்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
மேலும், பேராசிரியர் எமரிட்டஸ் ஆர்.எம்.டபிள்யூ. ராஜபக்ஷ, பேராசிரியர் ஜோசப் யோகராஜா ஸ்டானிஸ்லாஸ் மற்றும் திருமதி லரீனா அப்துல் ஹக் ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதேபோன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 1990 ‘சுவ செரிய’ அறக்கட்டளைக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
இதன்படி, 1990 சுவா செரிய அறக்கட்டளையின் புதிய தலைவராக ஏஎம்என் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (பிஎம்டி) தெரிவித்துள்ளது.
இதேவேளை, RJMAP சம்பத் மற்றும் நளின் பெரேரா ஆகியோர் 1990 சுவா செரிய அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.