13
on Sunday, January 05, 2025
By kugen
No comments
மன்னார் முருங்கன் பஜார் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முருங்கன் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
You may like these posts