13
சிறுமிக்கு ஆபாச காணொளி அனுப்பியவர் கைது ! on Sunday, January 05, 2025
பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமியை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (5) கைது செய்யப்பட்டதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
தந்திரிமலை இராணுவ முகாமிற்குட்பட்ட பதவி பராக்கிரமபுர பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.