10
வவுனியாவில் நினைவுகூரப்பட்டார் மாமனிதர் குமார் பொன்னம்பலம்!
மதுரி Sunday, January 05, 2025 முதன்மைச் செய்திகள், வவுனியா
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு தினம் தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக உள்ள கொட்டகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
- NextYou are viewing Most Recent Post