தேர்தல் படுதோல்வியை அடுத்து வடக்கில் தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமை பற்றி பேச முற்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் முயற்சி முனைப்படைந்துள்ளது.
இசசெயற்பாட்டிற்கான நடுவராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய வேட்பாளர்கள் இருவரும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தீர்மானமிக்க ஒரு அரசியல் வெற்றியை பெற வேண்டுமானால் இந்த இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என கோசம் எழுந்துள்ளது.
இரண்டு அரசியல் கட்சிளையும் இணைப்பதற்கான அடிப்படை கொள்கைகள் மற்றும் கட்சி சின்னங்கள் போன்ற காரணிகள் தொடர்பில் பின்னர் கலந்துரையாட வேண்டும் எனவும் இவ்விடயங்களை இரண்டு தரப்பினரிடமும் பேசக்கூடிய அரசியல்வாதி கரு ஜயசூரிய எனவும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி, வெகு விரைவில் கரு ஜயசூரியவுடன் இணைந்து குறித்த காரணிகள் தொடர்பில் முறையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இணைந்த கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.