பனி மற்றும் உறைபனி மழை: சூரிச்சிலிருந்து பல விமானங்கள் இரத்து

by adminDev

சுவிற்சர்லாந்து சூரிச்சில் நேற்று சனிக்கிழமை மாலை பொழிந்த பனியால் ஏற்பட்ட உறைபனியால் சூரிச் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை மொத்தம் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

நேற்று சனிக்கிழமை 40 விமானங்களின் இரத்து செய்யப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை 10க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

உறைபனி மழை விமானப் போக்குவரத்திற்கு குறிப்பிடத்தக்க சிக்கலை ஏற்படுத்துகிறது. வணிக ஜெட் விமானங்களின் இறக்கைகளிலும் தண்ணீர் உறைகிறது. சூரிச் விமான நிலையத்தில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பனி நீர் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்