நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் புதையல் தோண்டிய ஐவர் கைது !

by wp_fhdn

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் புதையல் தோண்டிய ஐவர் கைது ! on Sunday, January 05, 2025

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (04) புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹியோவிட்ட – அட்டுலுகம, மீவலகந்த பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரோமியல் மாவத்தை பகுதியிலும் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24,28,மற்றும் 41 வயதுடைய பனாகொட மற்றும் ஹிரிபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்.

பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்ட குறித்த பகுதிகளில் பூஜை பொருட்கள் உள்ளிட்ட புதையல் தோண்டும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்,சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்