செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் மாணவர் பட்டமளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும்!

by adminDev

செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் மாணவர் பட்டமளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும்! on Sunday, January 05, 2025

(செங்கலடி நிருபர் சுபா)

செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் மாணவர் பட்டமளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும்.

மட்டக்களப்பு – செங்கலடி வாசன் பாலர் பாடசாலையில் கல்வி கற்று தரம் ஒன்றிகாக பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் மிகவும் சிறப்பாக இன்று இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு.சுபாஸ் சந்திரநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலைய, பாலர் பாடசாலையின் பணிப்பாளர் ரீ.பத்மநாதன் கலந்துகொண்டிருந்ததுடன், கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பள்ளி இணைப்பாளர் திரு.வீ.அழகுரெட்ணம், செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர் திரு.கே.சுவர்ணேஸ்வரன், செங்கலடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.ஈ.நிரோசன் ஆகியோர் கலந்துகொண்டருந்தனர்.

வாசன் பாலர் பாடசாலையின் இவ்வாண்டிற்கான பரிசளிப்பு நிகழ்வானது செங்கலடி மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

அதிதிகள் மாணவச் சிறார்களினால் மலர்மாலை அணிவித்து பான்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வு மங்கள விழக்கேற்லுடன் ஆரம்பமானது.

மாணவர்களின் பாடல் ஆடல் நடனம், குழுநடனம் என்பன சபையைக் கவர்ந்ததுடன், ஆசிரிர்களின் நடனமும் இடம்பெற்றது.

நிகழ்வில் பாலர் பாடசாலையின் அதிபர் சுபாஸ் சந்திரநாதன் கொரவிக்கப்பட்டார்,

மேலும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டதுடன், பிரியா விடை பெறும் மாணவர்ள் பதக்கம் அணிவிக்கபட்டடதுடன் பட்டமளிப்பு விழாவும் அவர்களுக்கு இடம்பெற்றது.  

தொடர்புடைய செய்திகள்