தேர்தல் வரை அடித்து விரட்டப்போவதாக சொல்லி வந்த அதானியின் எரிசக்தி திட்டங்களை முன்னெடுக்க அரசு முற்பட்டுள்ளது.இத்திட்டங்களை பரிசீலிப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒனறை கொள்வனவு செய்து கட்டணமொன்றை செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் டெல்லி பயணத்தின் பின்னரான அரசின் நிலைப்பாடு மாறியுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.