10
யாழில். வன்முறை கும்பலின் ஆண்டு நிறைவுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் – இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வன்முறை கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவாலி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே மானிப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.