மகாராஷ்டிராவின் இட்லி தொழிற்சாலை: ஒவ்வொரு நாளும் தயாரிக்கப்படும் 25,000 இட்லிகள், 2,000 லிட்டர் சாம்பார்
இது மகாராஷ்டிரா சாங்லி நகரின் மையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இட்லி தொழிற்சாலை ஆகும்.
ஒவ்வொரு நாளும், இந்த தொழிற்சாலையில் 25,000 இட்லிகள் மற்றும் 2,000 லிட்டர் சூடான, சுவையான சாம்பார் தயாரிக்கப்படுகிறது. இவை பிரதானமாக, மொத்த விலையில் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகின்றன.
இந்த இட்லி தொழிற்சாலைக்கான திட்டம் அதன் உரிமையாளரான திம்மப்பா ஷெட்டியிடம் இருந்து உதித்தது. கர்நாடகாவைச் சேர்ந்த திம்மப்பாவின் பயணம் நெகிழ்ச்சியும் இடைவிடாத முயற்சியும் நிறைந்தது.
திம்மப்பா தனது தொழிற்சாலையில் இட்லிகள் தயாரிக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அவரைப் பிரபலமாக்கியது.
எனினும், வெற்றிக்கான அவரது பயணம் அவ்வளவு எளிதானது கிடையாது. 1992இல் சாங்லிக்கு குடிபெயர்ந்த திம்மப்பா, முறையான கல்வி இல்லாததால் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டார்.
எனினும், தளராத மன உறுதியால் படிப்படியாக தன்னை சாங்கிலியின் ஆஸ்தான குடியிருப்பாளர்களில் ஒருவராகவும் உணவு வணிகத்தில் புகழ்பெற்றவராகவும் நிலைநிறுத்திக்கொண்டார்.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.