யேர்மனியில் பாரவூர்தி விபத்து: 7100 மீன்கள் உயிரிழந்தன!

by admin

யேர்மனியின் வடக்குப் பகுதியில் ப்ரெமன் மற்றும் ஹாம்பேர்க் நகரங்களுக்கு இடையே A1 நெடுஞ்சாலையில் சுமார் 7,100 உயிருள்ள சால்மன் மீன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பாரவூர்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட அனைத்து சால்மன் மீன்களும் விபத்தின் காரணமாக வீதி முழுவதும் சிதறி விழுந்து உயிரிழந்தன.

சாலையில் பனிப்பொழிவு காரணமாக பனி வழுக்கும் நிலையில் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை வரை பனி  பொழிந்தது.

வழுக்கும் பனியில் பாரவூர்தி வழுக்கிச் சென்றதால் மற்றைய இரண்டு பாரவூர்திகளுடனும் ஒரு மகிழுந்துடனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து €200,000 மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

56 வயதான டிரைவர், பனி நிறைந்த சாலையில் பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே நிறுத்தினார். மற்றொரு பாரவூர்தி நிறுத்தப்பட்ட  பாரவூர்தி மீது மோதியது. இரு பாதைகளையும் பிரிக்கும் தடுப்புச்சுவர் மீது நிறுத்தப்பட்ட பாரவூர்தியைத் தள்ளியது. அப்போது அவர் எதிர் திசையில் பயணித்த மற்றொரு மகிழுந்தும் மோதியது.

வடக்கு யேர்மனியில் சாலையின் வழுக்கும் பனி காரணமாக பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

ப்ரெமனுக்கு அருகிலுள்ள வெர்டனில் உள்ள காவல்துறை  20 விபத்துக்கள் முறையிடப்பட்டன. ஹன்னோவர் மற்றும் பிரவுன்ச்வீக் இடையே உள்ள பீனில் அதிகாரிகள் 17 விபத்துகளை முறையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்