3
மட்டக்களப்பில் நீர்நிலைக்குள் வீழ்ந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை ! on Saturday, January 04, 2025
பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (04) அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்ட வாய்க்கால் நீரோடையில் விழுந்து இந்த ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
வாய்க்கால் நீரோடையில் விழுந்த குழந்தையை பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். எனினும், குழந்தை அதற்கு முன்பே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.