போலியான குரல் பதிவு தொடர்பில் பொலிஸ் தௌிவுபடுத்தி அறிக்கை வெளியீடு !

by admin

போலியான குரல் பதிவு தொடர்பில் பொலிஸ் தௌிவுபடுத்தி அறிக்கை வெளியீடு ! on Saturday, January 04, 2025

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான குரல் பதிவு தொடர்பில் தெளிவுபடுத்தி பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த அறிக்கை பின்வருமாறு,

அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் Clean sri lanka – 2025 திட்டத்துடன் இணைந்தாக இலங்கை பொலிஸாரால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல் இது” என குறிப்பிட்ட ஒருவரால் செய்யப்பட்ட போலியான குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஒரு பிரிவைக் குறிப்பிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட மேலும் சில விடயங்களை வலியுறுத்துவதாகவும், அவ்வாறு செய்யாதவர்கள் மீது 15.01.2025க்குப் பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இந்த குரல் பதிவு போலியான குரல் பதிவு எனவும், அவ்வாறான குரல் பதிவு இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை என , குறித்த குரல் பதிவுவை வெளியிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்