திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் கைது ! on Saturday, January 04, 2025
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் உறவினர்களால் வீட்டுத் தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டிருந்தன.
இந்த திருட்டுச் சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனையடுத்து, திருடிய பொருட்களுடன் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். இதில் 72 வயதான தந்தையும் 24 வயது மகனுமே கைது செய்யப்பட்டனர்.