கடந்த வருடத்தில் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவு !

by admin

on Saturday, January 04, 2025

ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர்நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார கால்நடை சுகாதார சேவையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.

இதில் 11 பேர் விசர்நாய்கடியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கலவத்தான் கடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள 8 இறப்புகளில், விலங்கு தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.

இவ்வாறு, நடுத்தர வயதுடையவர்கள் அதிகமாக விலங்கு கடிக்கு உள்ளாவதாகவும்,  அவர்களில் 2 பேரில் ஒருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாய்க்கடி அதிகமாகப் பதிவாகியிருந்தாலும், கடந்த பத்து வருடங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், குரங்கு கடி அதிகரித்துள்ளது.

மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்