ஒன்றரை வருடத்திற்கு முன் விகாரையில் திருடப்பட்ட வலம்புரிச் சங்கு கிணற்றிலிருந்து மீட்பு ! ..

by admin

ஒன்றரை வருடத்திற்கு முன் விகாரையில் திருடப்பட்ட வலம்புரிச் சங்கு கிணற்றிலிருந்து மீட்பு ! .. on Saturday, January 04, 2025

சுமார் ஒன்றரை வருட காலத்திற்கு முன்னர் களுத்துறை, தொடங்கொடை,எலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த வலம்புரிச் சங்கு ஒன்று அதே விகாரையில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தொடங்கொடை,எலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரையில் இருந்த விலையுயர்ந்த வலம்புரிச் சங்கு ஒன்று திருடப்பட்டுள்ளதாக சுமார் ஒன்றரை வருட காலத்திற்கு முன்னர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.

பொலிஸ் விசாரணையில், வலம்புரிச் சங்கை திருடிச் சென்ற சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த வலம்புரிச் சங்கு விகாரையில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வலம்புரிச் சங்கை சோதனையிட்டுப் பார்த்த போது அதில் பொருத்தப்பட்டிருந்த மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

சந்தேக நபர் வலம்புரிச் சங்கிலிருந்த மாணிக்கக் கற்களை மாத்திரம் கழற்றி எடுத்துவிட்டு வலம்புரிச் சங்கைக் கிணற்றில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்