1
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கிருமி நாசினிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் , மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலணை கிழக்கு பகுதியில் , சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கிருமி நாசினிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்தவர்கள் அவற்றை கைப்பற்றியதுடன் , அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களையும் , மீட்கப்பட்ட கிருமி நாசினிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.