9
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ 2 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதன்
பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்.
கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (03) முன்னிலையாகுமாறு யோஷித்த ராஜபக்ஷவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானார். இதனையடுத்து, அவர் இன்று நண்பகல் 12 மணி அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.