ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை, மார்கழி மாதத்தில் சதுர்த்தி திதியானது வருகின்றது.
அமாவாசை முடிந்து நான்காவது நாள் வளர்பிறை சதுர்த்தி திதி வரும்.
இந்த நாளில் விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு கோடான கோடி செல்வ வளம் பெருகும். கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
மார்கழி மாதம் என்றாலே அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதில் வெள்ளிக்கிழமையும், கூடவே சதுர்த்தி திதியும் சேர்ந்து வந்திருப்பதானது மேலும் விசேடமானது.
இன்று மாலை விநாயகர் ஆலயத்துக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
முடிந்தால் கொஞ்சம் அவலில் நாட்டு சர்க்கரை போட்டு, கலந்து விநாயகர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுத்தால், மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்கள் கிடைக்கும்.