விவசாய கிருமி நாசினியும் கடலால் வருகின்றது?

by wp_shnn

விவசாய கிருமி நாசினியும் கடலால் வருகின்றது?

வேலணை வள்ளிக்காடு, கல்லுண்டாய்முனை  கடற்கரையில்  இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட விவசாய கிருமி நாசினிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இதன்போது சந்தேகத்தின் பெயரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது விவசாய கிருமி நாசினிப் பொருட்கள்  இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நிலையிலேயே  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்