மேலும் ஒரு வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை ஆரம்பம் !

by wp_fhdn

மேலும் ஒரு வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை ஆரம்பம் ! on Friday, January 03, 2025

வடமத்திய மாகாணத்தில் தரம் 6 மூன்றாம் தவணை பரீட்சையின் புவியியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டு புதிய வினாத்தாள் தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சமூக வலைத்தளங்கள் ஊடாக வினாத்தளை வெளியிட்ட ஆசிரியர் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்