மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொ லை செய்த நபர்கள்

by wp_fhdn

மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொ லை செய்த நபர்கள் கைது !. on Friday, January 03, 2025

கிளீன் சிறிலங்கா வேண்டுகோளின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக பறவைகளை கொலை செய்த சந்தேக நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் வியாழக்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் இடம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம். இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் பறவைகளை சட்டவிரோதமாக கொலை செய்து வியாபாரப்படுத்தும் பல சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்கடிச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளும் கொலை செய்யப்பட்ட பறவைகளும் மீட்கப்பட்ட நிலையில் பொலிஸார் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டி சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்