பேச்சுக்கு இறங்கியது முன்னணி:துரோகிகள் இல்லையாம்!

by wp_shnn

தேர்தல் பின்னடைவுகளின் பின்னராக தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசப்போவதாக தமிழ் தேசிய முன்னணி தொடர்ந்தும் கூறிவருகின்றது.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்துள்ளோம்.அத்துடன் எதிர்வரும் 7 ஆம் திகதி சிவஞானம் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வரும் காலத்தில் அரசால் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்த பட்சம் அந்த விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் கூறிவருகின்றார்.

அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைக் கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

முன்னதாக அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட முன்னணி ஊடகவியலாளர்கள் மற்றும் யாழ்.ஊடக அமையத்தை இந்திய உளவப்பிரிவின் முகவர்கள் என முன்னணியின் தலைவர்கள் சேறுபூசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்