5
நடைமுறை, இராஜதந்திர தேவைகளை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு பணிகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து வெளிவிவகார அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதம் புதிய நிர்வாகம் உருவானதைத் தொடர்ந்து 15 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதை அடுத்து, முக்கிய இராஜதந்திர பதவிகள் காலியாக இருந்ததை அடுத்து இந்த விளக்கம் வந்துள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல தூதுவராலயங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல அலுவலகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நியாயமான கால அவகாசம் தேவைப்படும் எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.